Home இந்தியா கேரளா: ஐஎஸ் தொடர்புடைய 3 பேருடன் விசாரணை, ஜாகிர் நாயக் நூல்கள், காணொளிகள் பறிமுதல்!

கேரளா: ஐஎஸ் தொடர்புடைய 3 பேருடன் விசாரணை, ஜாகிர் நாயக் நூல்கள், காணொளிகள் பறிமுதல்!

1127
0
SHARE
Ad

காசர்கோட்: கேரளாவின் காசர்கோட், பாலக்காடு பகுதிகளை சேர்ந்த மூவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்ப்பு இருப்பதை கருதி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களது வீடுகளில் நடந்த சோதனையில் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மூவரிடம் இருந்தும் சிம் அட்டைகள், கைபேசிகள், நினைவக அட்டைகள், விரலிகள், அரபு மற்றும் மலையாளத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவரது மதப் பேச்சுகள் அடங்கிய காணொளிகள் உள்ளிட்டவையும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்ரவாத அமைப்பில் சேர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016-ஆம் ஆண்டில் தென்மாநிலத்தை சேர்ந்த ஆறு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 21 பேர் இந்த பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காக சிரியாவுக்கு சென்றுள்ளனர்.