கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் பிரதமரை மாற்றும் உரிமை மக்களுக்கு மட்டுமே உள்ளது என பிரதமர் மகாதீர் முகமட் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
முன்னதாக சுல்தான் மஹ்மூட்டின் துங்கு மக்கோத்தா பதவி மீட்டுக் கொள்ளப்பட்டதை பிரதமர் நினைவுக்கூர்ந்தார். ஆகையால், தற்போதைய துங்கு மக்கோத்தா ஜோகூரும் மாற்றப்படலாம் என அவர் கூறினார்.
அண்மையில் வெளியான யூடியூப் காணொளி ஒன்றில், ஜெடிதி காற்பந்து பயிற்றுனர் பெஞ்ஜமின் மோராவை மாற்றுவதற்கு பதிலாக பிரதமரை மாற்றி விடலாம் என துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார்.
அப்படி ஒருவேளை பிரதமரை மாற்ற வேண்டிய எண்ணம் துங்கு மக்கோத்தாவிற்கு இருந்தால், அவர் தேர்தலில் வாக்களிக்கலாம் எனவும் பிரதமர் கூறினார்.