Home Video அமெரிக்க விருது பெற்ற கமலி ஆவணப்படம், 2020-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!

அமெரிக்க விருது பெற்ற கமலி ஆவணப்படம், 2020-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!

896
0
SHARE
Ad

சென்னை: “கமலி”, சென்னைக்கு வெளியில் உள்ள கடலோர நகரமான மகாபலிபுரத்தில் படம்பிடிக்கப்பட்ட ஓர் ஆவணப்படம். கமலியின் தாய் சுகந்தி தன் மகளை வளர்க்க எவ்விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடியுள்ளார் என்பதைக் கடந்து, கமலி தலைச் சிறந்த ஸ்கேட் போர்டராக ஆகி விடுவார் என்ற நம்பிக்கை அவரிடத்தில் இருந்ததாக சுகந்தி தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் சாஷா ரெயின்போ நியூசிலாந்தில் பிறந்து இப்போது இலண்டனில் வசித்து வருகிறார். முதன்முதலாக இந்தியா வந்திருந்த போது வைல்ட் பீஸ்ட்ஸில்ஆல்பா பேமிலிஎன்ற பாடல் காணொளிக்கு கமலி மற்றும் பிற ஸ்கேட்டிங் பெண்களை படமெடுத்துள்ளார்

சுகந்தியின் உறுதியான கருத்தியல் மற்றும் பார்வை ரெயின்போவை வெகுவாக கவர்ந்ததன் அடிப்படையில், இந்த ஆவணப்படத்தை தயாரிக்கவும் உலகிற்கு சுகந்தியின் கதையை சொல்லவும் செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

என் பெற்றோரும் உள்ளூர் சமூகமும் கமலியை இம்மாதிரியான விளையாட்டில் ஈடுபடச் செய்வதை ஒப்புக் கொள்ளவில்லை. கமலியின் கைகால்களை உடைக்கவே நான் இந்த வேலையைச் செய்வதாக சொன்னார்கள். நான் தொடாத தூரங்களை என் மகள், கமலி தொட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்  என சுகந்தி கூறினார்.

இந்த ஆவணப்படம் 2020 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. கீழே கொடுக்கபட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: