Home நாடு ஜோகூர் அரண்மனைக்குச் சொந்தமான மாடோஸ் நிறுவனம் மீது விசாரணை!- அப்துல் காடிர்

ஜோகூர் அரண்மனைக்குச் சொந்தமான மாடோஸ் நிறுவனம் மீது விசாரணை!- அப்துல் காடிர்

1233
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீருக்கும் ஜோகூர் அரண்மனைக்குமான மோதல் தற்போதைக்கு ஓயாது எனக் கூறப்படுகிறது.

நேற்று திங்கட்கிழமை நடந்த சிறப்பு நேர்காணலின் போது, பிரதமர் மகாதீர் முகமட் துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயிலை சிறு பையன் எனக் கூறி அறிவற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரதமரின் ஊடக மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகரான அப்துல் காடிர் ஜாசின், ஜோகூர் அரண்மனைக்குச் சொந்தமான மாடோஸ் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் மீது விசாரணை அறிக்கையை தொடங்க வேண்டும் என காவல் துறைத் தலைவரை கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் மீது வருமான வரி துறை சோதனை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முகநூல் பதிவிக்கு பின்னர் நிலைமை மேலும் மோசமடையும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.