கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்றதும் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதைப் பற்றி தாம் யோசித்து வருவதாக ஊடகங்களுடனான நேர்காணலின் போது துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
“பண்டான் நாடாளுமன்ற உறுப்பினராக எனது பதவி காலத்தை முடித்ததும், தீவிரமான அரசியலில் ஈடுபடுவதைப் பற்றி நான்யோசிப்பேன்”என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சியின் ஆலோசனைக் குழுவின் தலைவருமான அசிசா கூறுகையில், எதிர்காலத்தில் ஒரு பொறுப்பான குடிமகளாக இருந்து நாட்டின் அபிவிருத்திக்காக பங்களிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவில் முதல் பெண் துணைப் பிரதமராக பதவி ஏற்ற பெருமையை டாக்டர் வான் அசிசா பெறுகிறார்.