Home வணிகம்/தொழில் நுட்பம் ஹேம்லி விளையாட்டுப் பொம்மைகள் கடைகளை வாங்கிய முகேஷ் அம்பானி

ஹேம்லி விளையாட்டுப் பொம்மைகள் கடைகளை வாங்கிய முகேஷ் அம்பானி

1105
0
SHARE
Ad

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது சில்லறை விற்பனையை அதிகரிக்கவும், இந்தியாவில் அமேசான்.காம் மற்றும் வால்மார்ட் இன்க் போன்ற நிறுவனங்களுடனான போட்டித் தன்மையை அதிகரிக்கவும் பிரிட்டனின் 259 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேம்லி சங்கிலித் தொடர் கடைகளை வாங்கியுள்ளார்.

அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஹேம்லி கடைகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் 18 நாடுகளில் 167 விற்பனை மையங்களை ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ளது.

ஹேம்லி வணிக முத்திரை கொண்ட 88 கடைகள் தற்போது இந்தியாவில் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

ஹேம்லி நிறுவனத்தை வாங்குவதற்கு 100 மில்லியன் பவுண்டுகளை (சுமார் 139 மில்லியன் ரிங்கிட்) ரிலையன்ஸ் செலவிட்டுள்ளது. 1760-இல் தொடங்கப்பட்ட ஹேம்லி விளையாட்டுப் பொம்மைகள் கடை 1881-இல் தனது இலண்டன் விற்பனை மையத்தைத் திறந்தது.

இந்தியாவில் ஹேம்லி இணைய வணிகத்தில் முன்னணி வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2028-ஆண்டுக்குள் இந்தியாவின் இணைய வணிகத்தின் அளவு 28 பில்லியன் டாலராக உயரும் என கணிக்கப்படுகிறது.