கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் மனைவியான ரோஸ்மா மன்சோருக்கு சொந்தமான மதிப்புமிக்க பொருட்களை மலேசிய அரசாங்கம் பறிமுதல் செய்த வழக்கில் லெபனிய தங்க நகை விற்பனையாளர் தலையிட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
டேவிட் குருபாதம் எனும் அந்நபர் வருகிற மே 24-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற இருக்கும் வழக்கு விசாரணையின் போது இந்த விண்ணப்பம் செய்யப்படும் என்று மலேசிய இன்சைட்டிற்குத் தெரிவித்துள்ளார்.
“இந்த வழக்கு தொடர்பான விவரங்களைக் கோரி, நாங்கள் ஏற்கனவே மலேசிய அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி விட்டோம்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
“இந்த அபராதம் குறித்த விவரங்களைப் பெற்றவுடன், 44 நகைகளை குறித்து அதில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என உறுதிப்படுத்துவோம்” என அவர் தெரிவித்தார்.
“அப்படி ஒரு வேளை அந்த 44 நகைகளில் ஏதேனும் ஒன்று, வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால், நாங்கள் இந்த வழக்கில் ஈடுபடுவோம், ஏனெனில் சம்பந்தப்பட்ட எங்கள் வாடிக்கையாளர் அந்த நகைகளுக்கு சட்டப்பூர்வமான உரிமையாளர்” என அவர் மேற்கோளிட்டுள்ளார்.