Home நாடு “லிம் கிட் சியாங் என்னுடன் விவாதத்திற்கு வர தயாரா? 1எம்டிபி குறித்தும் கேட்கலாம்!”- நஜிப்

“லிம் கிட் சியாங் என்னுடன் விவாதத்திற்கு வர தயாரா? 1எம்டிபி குறித்தும் கேட்கலாம்!”- நஜிப்

714
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முக்கிய அரசியல் விமர்சகரான, இஸ்காண்டார் புத்ரியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கை தம்மோடு விவாதிக்குமாறு சவால் விடுத்துள்ளார்.

தாம் எந்நேரத்திலும் அவருடன் விவாதிக்க தயாராக இருப்பதாகவும், லிம் தனது நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட அட்டவணையை புரிந்து கொண்டு விவாதத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசு, என்னை ஓய்வெடுக்க விடுவதாக இல்லை. லிம் வாதிடுவதற்குத் தயாராக இருந்தால், அவருக்காக நேரம் எடுத்துக்கொள்கிறேன்என்று நஜிப் கூறினார்.

#TamilSchoolmychoice

அரசியல் எதிரிகளான இருவருமே இம்மாதிரியான சவால்களை விடுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லிம் கிட் சியாங் நஜிப்பின் அரைகூவலுக்குத் தயார் என பதிலளித்துள்ளதோடு, அரசியல்வாதிகளின் அதிகார அத்துமீறல் குறித்த தலைப்பையும் முன்வைத்துள்ளார். இதற்கு ஒப்புதல் வழங்கிய நஜிப், இதர தலைப்புகளையும் லிம் ஏற்றுக் கொண்டு விவாதத்திற்கு வருவார் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.