Home இந்தியா அமேதியில் ராகுல் பின்னடைவு, பாஜக வேட்பாளர் முன்னிலை!

அமேதியில் ராகுல் பின்னடைவு, பாஜக வேட்பாளர் முன்னிலை!

718
0
SHARE
Ad

புது டில்லி: முதல் முறையாக இரு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி தற்போது அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருவதாகக் கூறப்பபடுகிறது.

இத்தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிரிதி இராணி முன்னனியில் இருக்கிறார். தேர்தலின் பிரச்சாரத்தின் போது ஸ்மிரிதி தீவிரமாக தனது பிரச்சாரத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவரின் அலட்சியப் போக்கினை முன்வைத்து ஸ்மிரிதி பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அமேதியில் தோல்வியுறுவோம் என்ற பயத்தினாலேயே ராகுல் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டதாகவும் கூறப்படுகிறது.   

#TamilSchoolmychoice

எனினும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார்.