Home வணிகம்/தொழில் நுட்பம் அமெரிக்காவில் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் முத்து நெடுமாறன்

அமெரிக்காவில் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் முத்து நெடுமாறன்

1046
0
SHARE
Ad

சான் ஓசே – அமெரிக்காவில் இன்று திங்கட்கிழமை (ஜூன் 3) தொடங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துலக தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான 2019 மாநாட்டில் மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறனும் கலந்து கொள்கிறார்.

ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதோடு, அமெரிக்காவில் வேறு சில நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு கொள்வார்.

ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் முத்து நெடுமாறனுக்கு வழங்கப்பட்ட மாநாட்டு சின்னங்களில் மலேசியப் பிரதிநிதி என்பதைக் குறிக்கும் மலேசியக் கொடியைக் கொண்ட சின்னம்

தமிழ் கணினித் துறையில் நீண்ட காலமாக ஈடுபாடு கொண்டிருக்கும் அவர் முரசு அஞ்சல் மென்பொருளின் உருவாக்குநரும், செல்லினம், செல்லியல் ஆகிய குறுஞ்செயலிகளின் தோற்றுநரும் ஆவார்.

#TamilSchoolmychoice

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரத்துவ தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களில் ஒருவராகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் முத்து நெடுமாறன், ஏற்கனவே பலமுறை ஆப்பிள் மேம்பாட்டாளர்களுக்கான அனைத்துலக மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டில் முத்து நெடுமாறன் கலந்து கொண்டபோது, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்குடன் அவர் எடுத்துக் கொண்ட தம்படத்தைக் கீழே காணலாம்.

டிம் குக் – முத்து நெடுமாறன் தம்படம்