Home இந்தியா ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் எதிர்ப்பலை, 73 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை பீட்டா முன்வைத்தது!

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் எதிர்ப்பலை, 73 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை பீட்டா முன்வைத்தது!

779
0
SHARE
Ad

புதுடில்லி:  ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி புதிய சர்ச்சை ஒன்றை பீட்டா அமைப்பு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பீட்டா தரப்பில் 73 பக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகள் தாக்கப்படுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு பெரும் போராட்டங்களுக்கு பின் முறியடிக்கப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன

இந்நிலையில் மாடுகள் எவ்வாறு  தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றன என்பது குறித்த 73 பக்க ஆய்வறிக்கையை பீட்டா தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகளின் வால்கள் கடிக்கப்படுவதாகவும், முறுக்கப்படுவதாகவும், கூட்டத்தை நோக்கி வேகமாகச் செல்வதற்காக மூக்கணாங்கயிறு வெடுக்கென இழுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#TamilSchoolmychoice

இவ்வாறு மூக்கணாங்கயிறை இழுக்கும்போது, மாடுகளுக்கு காயம் ஏற்படுவதாக பீட்டாவின் ஆய்வறிக்கை கூறுகிறது. பதற்றத்திற்கு ஆளான மாடுகள் பார்வையாளர்கள் பக்கம் பாய்ந்து அவர்களை தாக்குவதாகவும், இதில் சிலர் உயிரிழக்க நேரிடுவதாகவும் பீட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

2017-ஆம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டப்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட்டதற்கு பின்னர்  பொதுமக்களில் 42 பேர், காளைகள் 14 மற்றும் ஒரு பசு ஆகியவை உயிரிழந்திருப்பதாக பீட்டா குற்றம் சாட்டியுள்ளது