Home நாடு ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு பணம் வசூலிக்காதீர், ஐஜிபி எச்சரிக்கை!

ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு பணம் வசூலிக்காதீர், ஐஜிபி எச்சரிக்கை!

621
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை புதன்கிழமை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் ஹரிராயா கொண்டாட்டத்தைக் காரணமாகக் கொண்டு உயர்மட்டக்  காவல் அதிகாரிகள் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் உடனே இடமாற்றம் செய்யப்படுவர் என காவல் துறை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

இம்மாதிரியான செயலானது தொடரப்படக்கூடாதது என அவர் கூறினார். மேலும், வெறுக்கத்தக்க இந்தச் செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக தாம் எச்சரித்து விட்டதாகவும், ஆயினும் இந்த நடவடிக்கையானது தொடர்வதாக தமக்கு புகார்கள் வந்துள்ளதாலும் தாம் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த விவகாரம் குறித்து காவல் அதிகாரிகளுக்கு உள்குறிப்பாணை எச்சரிக்கையை தாம் விடுத்திருப்பதாகவும் ஹாமிட் குறிப்பிட்டார். பணம் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் பெரிய அளவிலான திறந்த இல்ல உபசரிப்புகளை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.