Home நாடு லத்தீஃபா கோயா: ஒருதலைப்பட்சமான முடிவுகள் ஜனநாயக சூழலுக்கு ஏற்புடையதல்ல!- ராம் கர்பால்

லத்தீஃபா கோயா: ஒருதலைப்பட்சமான முடிவுகள் ஜனநாயக சூழலுக்கு ஏற்புடையதல்ல!- ராம் கர்பால்

661
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பிரதமர் மகாதீர் முகமட்டால் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக வழக்கறிஞர் லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டது குறித்து வழக்கறிஞரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் வருத்தம் தெரிவித்துள்ளார்.   

இம்மாதிரியான ஒருதலைப்பட்சமான முடிவுகள் ஜனநாயக நாட்டிற்கு நல்லதாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் பிரதமரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் விவகாரம் இவ்விடத்தில் கேள்விக்குட்படுத்தப்படும் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“முக்கியமான பொது சேவை பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொழுது, நன்கு ஆராய்ந்த பின்னரே நியமனம் செய்ய வேண்டும் என்பதற்காக சிறப்பு நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது. இது குறித்து பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது” என அவர் தெரிவித்தார்.

ஒருதலைப்பட்சமான நியமனங்களைத் தவிர்ப்பதற்கே இந்த குழு அமைக்கப்பட்டது” என்று ராம் கூறினார்.

மேலும், ஒருவரை நியமிக்க எந்தவொரு ஆலோசனையும் கோராமல் முடிவெடுக்கத் தெரிந்த பிரதமருக்கு, ஒருவரை நீக்குவது குறித்தும் முடுவெடுக்க முடியும் எனும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ராம் தெரிவித்தார்.