Home இந்தியா தமிழகம்: விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

தமிழகம்: விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

816
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

திமுகவைச் சார்ந்த இவர் அக்கட்சியின் மாவட்ட அவைத்தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.  கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராதாமணி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ராதாமணியின் மறைவை அடுத்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.