Home இந்தியா தமிழில் பதவியேற்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தமிழில் பதவியேற்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

637
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவையின் முதல் சந்திப்புக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை கூடியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழிலேயே பதவியேற்றது பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

அவர்கள் அனைவரும், அவரவர் உரையின் இறுதியில், தமிழ் மொழியையும், தமிழ்நாட்டின் அடையாளத்தையும் பெரும்பாலாக குறிப்பிட்டனர். சிலர் அவரவர் கட்சித் தலைவர்கள் பெயரை முழக்கமிட்டு பதவியேற்றனர்.

#TamilSchoolmychoice

இவர்களில், அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரவிந்தரநாத் பதவியேற்கும் போது, ‘வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்என சேர்த்துக் கூறியதும், பாஜகவினர் அனைவரும் அவருக்கு ஆதரவாக கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.