Home நாடு விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா!

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா!

1205
0
SHARE
Ad

புத்ராஜெயா: சில நாட்களுக்கு முன்பு மாமன்னர் சுல்தான் அப்துல்லா சமூகப் பக்கங்களில் கெஎப்சி உணவகத்தில் உணவுக்காக வரிசையில் நின்ற புகைப்படம் பரவலாக பகிரப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை அவர் மீண்டும் மலேசியர்களை ஈர்த்துள்ளார்.

இம்முறை, புத்ராஜெயாவில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க அவர் உத்தியோகபூர்வ வாகனத்திலிருந்து வெளியேறிய புகைப்படங்கள் பரவலாகப் பகிரப்படுகின்றன.

புத்ராஜெயாவிலுள்ள இஸ்தானா மெலாவாதியில் பிரதமருடன் அமைச்சரவைக்கு முந்தைய கூட்டத்திற்கு மாமன்னர் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

பாதிக்கப்பட்டவருக்கு உதவும் மாமன்னரின் புகைப்படம் இஸ்தான நெகாரா இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களுடன் மிகவும் நட்பாக இருக்கும் மாமன்னர் சுல்தானின் தன்மை மக்களால் பாராட்டப்பட்டும் வாழ்த்தப்பட்டும் வருகிறது.