Home நாடு 4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் மறுத்தார்!

4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் மறுத்தார்!

702
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

கோலாலம்பூர்: வெளிநாட்டு விசா அமைப்பு (விஎல்என்) சம்பந்தப்பட்ட 4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்புலான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்ளாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி எதிர் நோக்கியுள்ளார்.

இன்று புதன்கிழமை (ஜூன் 26) அமர்வு நீதிமன்ற நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் அவர் இக்குற்றங்களை மறுத்து விசாரணைக் கோரினார்.

பாகன் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், அல்ட்ரா கிரானா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான வெகுமதியாக  300,000 சிங்கப்பூர் டாலர்களை இருமுறையும், 1.04 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை இருமுறையும், 520,000 சிங்கப்பூர் டாலர்களை மூன்று முறையும் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

200,000 ரிங்கிட் பிணையில் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், வருகிற ஜூலை 31-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதற்கிடையில், மேலும் 40 ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி எதிர்கொள்ள உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த புதிய குற்றச்சாட்டுகள் மூலமாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் 87-ஆக உயர்ந்துள்ளது. அவர் ஏற்கனவே 47  குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து நாளை வியாழக்கிழமை மேலும் கூடுதல் 33  குற்றச்சாட்டுகளை ஷா அலாம் அமர்வு நீதிமன்றத்தில் எதிர்கொள்வார் என்று அறியப்படுகிறது.