Home Video “தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்

“தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்

1440
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் கோலாலம்பூரில் இயங்கிவரும் மலேசிய வடிவமைப்பு காப்பகமும் (Malaysia Design Archive) ஹூருப் (Huruf) எனப்படும் எழுத்துரு தொடர்பான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் “தமிழ் எழுத்துருக்களைக் கண்டுபிடித்தல்: அன்றாடத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் மொழியின் இணைப்பு” (Finding Tamil Typography: Linguistic Inclusion in Everyday Technology) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி பிற்பகலில் கோலாலம்பூரில் உள்ள மலேசிய வடிவமைப்பு காப்பகத்தில் நடைபெற்ற இந்த உரை நிகழ்ச்சியில், 1980-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவிலும், அனைத்துலக அளவிலும் தமிழ் அச்சகத் துறை (பிரிண்ட்) தமிழ் எழுத்துரு பயன்பாட்டிற்காக, அச்சுக் கோர்ப்பு முறைக்கு முழுக்க முழுக்க உலோகத்திலான எழுத்துரு வடிவங்களையே நம்பியிருந்த காலகட்டம் குறித்தும், அதன்பின்னர் கணினியின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் தனதுரையில் விளக்கினார் முத்து நெடுமாறன்.

தமிழ் எழுத்துருக்களை கணினித் திரையில் கொண்டுவர, தான் எடுத்த முயற்சிகள், அதில் எதிர்நோக்கிய சவால்கள், அனைத்துலக அளவுக்கு தமிழ் எழுத்துருக்களை நவீன கையடக்கக் கருவிகளில் புகுத்தியது, அதன்வழி சாதித்தவைகள் போன்ற பல விவரங்களை சுவாரசியமாகவும், விரிவாகவும், பெரும்பாலும் இந்தியர் அல்லாதவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் விவரித்தார்.

#TamilSchoolmychoice

அந்த உரையின் காணொளி வடிவத்தை கீழ்க்காணும் ‘செல்லியல் அலை’ யூடியூப் தளத்தின் வழி காணலாம்: