Home கலை உலகம் இயக்குனர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் விலகல்!

இயக்குனர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் விலகல்!

788
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த பதவி விலகல் குறித்த அறிவிப்பை அவர் நேற்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையின் மூலமாக அவர் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற இயக்குனர்கள் சங்க பொதுக் குழுவில், நிருவாகிகள், இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் அனைவரும் ஒன்றுகூடி எந்த ஒரு போட்டியும் இன்றி பாரதிராஜாவை ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுத்தனர். ஒரு மாதம் கடந்த நிலையில், நேற்று அந்த பதவியிலிருந்து பாரதிராஜா விலகினார்.

தேர்தலில் போட்டியிடமால் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால், ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக எனது தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். ஒரு மூத்த இயக்குனராக சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டுதலும், பேரன்பும் என்றும் தொடரும்.” என்று அவர் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.