கோலாலம்பூர்: எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாததால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகள் இருந்து வந்த போதிலும், இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையின் விதிகளுக்கு ஏற்ப இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஏறக்குறைய ஐந்து மணி நேர விவாதத்திற்குப் பிறகு, இந்த முன்மொழிவு ஒப்புக் கொள்ளப்பட்டதா என்று முகமட் ஆரிப் கேட்கும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொள்வதாக சத்தமிட்டனர்.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துகளை அறிவிக்கக் கோரும் போதுமான அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியிருந்தனர்.