Home நாடு “நான் உறுப்பினர்களை அழைத்தேன், ஒட்டு மொத்த கட்சியை அல்ல!”-மகாதீர்

“நான் உறுப்பினர்களை அழைத்தேன், ஒட்டு மொத்த கட்சியை அல்ல!”-மகாதீர்

631
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மேல்

கோலாலம்பூர்: மலாய் அரசியல் கட்சிகள் பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற தனது அழைப்பை அரசியல் தலைவர்களும் மக்களும் தவறாக புரிந்து கொண்டனர் என்று பெர்சாத்து கட்சித் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் விளக்கினார்.

குறிப்பிட்ட மலாய் கட்சியிலிருக்கும் உறுப்பினர்களை மட்டுமே தாம் பெர்சாத்துவில் இணைந்து கொள்ளுமாறு கூறியதாகவும், அக்கட்சியையே பக்காத்தான் ஹாராப்பானில் இணைந்து செயலாற்றும்படி கூறவில்லை என்றும் அவர் கூறினார்.

பக்காத்தான் ஹாராப்பான் மற்ற கட்சிகளை ஏற்க முடியாது. நாங்கள் அதிகமான கட்சிகளை ஏற்றுக்கொண்டால், தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருக்கும். அனைவரும் தங்கள் வேட்பாளரை நிறுத்த விரும்புவார்கள். அவர்கள் (உறுப்பினர்கள்) தற்போதுள்ள கட்சிகளில் (பக்காத்தான் ஹாராப்பான்) சேர்ந்தால் எந்த பிரச்சனையும் இல்லைஎன்று அவர் நேற்று திங்கட்கிழமை புத்ராஜெயாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கட்சிகள் காரணமாக மலாய்க்காரர்கள் பின்தங்கவில்லை, மாறாக அவர்களிடத்தில் ஒற்றுமை இல்லை.” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி, மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் அம்னோ உட்பட அனைத்து மலாய் கட்சிகளையும் பெர்சாத்து கட்சியில் இணைய மகாதீர் அழைத்திருந்தார்.