Home இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பு!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பு!

716
0
SHARE
Ad

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மருத்துவ படிப்பு சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், இந்திய மருத்துவக் குழு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது

மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு..ஸ்டாலின், மேலும் இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்

#TamilSchoolmychoice

இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார்.

இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு..ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன், கீ.விரமணி, பாலகிருஷ்ணன், முத்தரசன், கமல்ஹாசன், சீமான், அபுபகார் உள்ளிட்ட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, விசிக, மதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாமக உள்ளிட்ட 16 கட்சிகள், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அளிக்கப்படும் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன

பாஜக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் ஆகிய ஐந்து கட்சிகள் மட்டுமே 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.