Home நாடு கூடுதல் சொத்துகளை அம்னோ விற்கக் கூடும்!- அனுவார் மூசா

கூடுதல் சொத்துகளை அம்னோ விற்கக் கூடும்!- அனுவார் மூசா

721
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மீடியா பிரிமா பெர்ஹாட்டில் உள்ள தங்களின் பங்குகளை விற்ற பிறகு, அம்னோ மேலும் அதன் சொத்துகளை விற்க திட்டமிட்டுள்ளது என்று கட்சி பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், கட்சியால் விற்கப்பட உள்ள சொத்துகளைப் ப்ற்றியும் அவற்றை வாங்க முன் வந்துள்ள தரப்பினரின் விவரங்களையும்  அவர் மறுத்துவிட்டார்.

ஒரு கட்சியாக அம்னோவுக்கு பொருளாளர் தலைமையில் முதலீட்டு இலாகா உள்ளது, அதாவது நிதி மற்றும் முதலீட்டுக் குழு. இந்த முதலீட்டு விசயங்கள் விரிவானவை. நான் எந்த விவரங்களையும் வெளியிட விரும்பவில்லை. இது கட்சி பொருளாளரின் அதிகாரத்திற்கு உட்பட்டது.” என்று அனுவார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அம்னோ வைத்திருக்கும் அதிகமான பங்குகளை விற்கும் முயற்சி உண்மையில் உள்ளது என்பதை மட்டுமே உறுதிப்படுத்த முடியும்என்று அவர் கூறினார்.