Home 13வது பொதுத் தேர்தல் கோத்தா ராஜா,ஸ்ரீஅண்டாலாஸ் தொகுதிகளில் ஹிண்ட்ராப் உதயகுமார் தனித்துப் போட்டி

கோத்தா ராஜா,ஸ்ரீஅண்டாலாஸ் தொகுதிகளில் ஹிண்ட்ராப் உதயகுமார் தனித்துப் போட்டி

569
0
SHARE
Ad

HINDRAFகோலாலம்பூர், ஏப்ரல் 4 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் தலைவர்களுள் ஒருவரான பி.உதயகுமார் கோத்தா ராஜா நாடாளுமன்றம் மற்றும் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

மக்கள் கூட்டணியுடன் இணைந்து செயல்படமுடியாத பட்சத்தில், தான் தனித்து போட்டியிடப்போவதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோல சிலாங்கூர், கிளானா ஜெயா ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஸ்ரீ மூடா, ஈஜொக், புக்கிட் மெலாவத்தி மற்றும் ஸ்ரீ செத்தியா ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்க இயக்கம் முடிவெடுத்துள்ளதாகவும், தேர்தல் ஆணையம் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தேதியை அறிவித்தவுடன், ஹிண்டராப் சார்பாக களமிறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் உதயகுமார் தெரிவித்தார்.