Home கலை உலகம் பிக்பாஸ் 3 : ஐவரில் வெளியேறப் போவது யார்?

பிக்பாஸ் 3 : ஐவரில் வெளியேறப் போவது யார்?

828
0
SHARE
Ad

சென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐவர் வெளியேற்றப்பட சக பங்கேற்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டனர்.

அபிராமி, இயக்குநர் சேரன், மோகன் வைத்யா, சரவணன், மீரா ஆகியோரே அந்த ஐவராவர். இவர்களில் வழக்கமாக சனிக்கிழமை நிகழ்ச்சியில் காப்பாற்றப்படுபவர் யார் என்ற விவரத்தை கமல்ஹாசன் கூறிவிடுவார்.

ஆனால் இந்த முறை காப்பாற்றப்படுபவரின் பெயரையும் குறிப்பிடாமல் நாளை சந்திப்போம் என்று நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார் கமல்.

#TamilSchoolmychoice

இன்றிரவு ஒளியேறும் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் பங்கேற்பாளர் யார் என்பது தெரியவரும்.