Home நாடு பார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

816
0
SHARE
Ad

ஈப்போ: நேற்று செவ்வாய்க்கிழமை தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட பார்ஹாஷ் வாபா சால்வடாரின் செயல் அருவருக்கத்தக்கது என்று பேராக் மாநில பிகேஆர் கட்சியின் மகளிர் பகுதித் தலைவர் சுவா யீ லிங் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஒற்றுமையை மேலோங்க செய்ய வழிகள் எடுத்துக் கொண்டிருக்கையில் பார்ஹாஷ்ஷின் நேற்றைய நடவடிக்கை ஏற்க தக்கது அல்ல என்று அவர் தெரிவித்தார்.

காவல் துறையினரின் நிபுணத்துவத்தை சவால் செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும், அது அவர்களின் மீதுள்ள நம்பகத்தன்மையை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இதனால் கட்சியின் உட்கட்சி பிரச்சனைகளை சரிபடுத்துவதற்கு தாமதம் ஏற்படும் என்று சுவா கூறினார்.

#TamilSchoolmychoice

இப்போதைக்கு, உண்மையான சூத்திரதாரியை கண்டுபிடிக்கும் வரை, நாம் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் கட்சியின் சட்டத்திற்கு இணங்க வேண்டும் மற்றும் கட்சியின் பொறுப்பான தலைவர்கள் என்ற தரத்தை காட்ட வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.

கட்சி கடுமையான ஒழுங்கு நடவடிக்கையை பார்ஹாஷ் மீது எடுக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாக சுவா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.