Home நாடு அஸ்ட்ரோ அவானி வழங்கும் #AgongKita சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ட்ரோ அவானி வழங்கும் #AgongKita சிறப்பு நிகழ்ச்சி

866
0
SHARE
Ad

கோலாலம்பூர்- நாட்டின் 16-வது மாமன்னர், சுல்தான் அப்துல்லா அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்வதை முன்னிட்டு, எதிர்வரும் ஜுலை 30-ஆம் தேதி அஸ்ட்ரோ அவானி இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைத் தங்களுடைய நேயர்களுக்காக ஒளியேற்றவுள்ளது.

பிற்பகல் 12 மணிக்கு #AgongKita எனும் தலைப்பில் ஒளியேறவுள்ள நிகழ்ச்சியில் மாமன்னரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் எவ்வாறு பதில் அளிக்கின்றார் என்பதைக் கண்டு களிக்கலாம். #AgongKita நிகழ்ச்சி www.astroawani.com அகப்பக்கத்தில் பிரத்தியேகமாக ஒளியேறும்.

இரவு 9 மணிக்கு, அஸ்ட்ரோ அவானி வழங்கும், “Eksklusif Bersama Yang di-Pertuan Agong XVI” நிகழ்ச்சியில், மாமன்னர் தனது தனிப்பட்ட வாழ்க்கைக் கதைகளில் பலவற்றைப் பகிர்ந்துக் கொள்ளவுள்ளார். இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை அஸ்ட்ரோ அவானி (அலைவரிசை 501), அஸ்ட்ரோ ரியா (அலைவரிசை 104), அஸ்ட்ரோ ரியா எச்.டி (அலைவரிசை 123), அஸ்ட்ரோ AEC (அலைவரிசை 301), அஸ்ட்ரோ AEC எச்.டி (அலைவரிசை 306), அஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் ஹலோ (அலைவரிசை 110) ஒளியேற்றவுள்ளது.

#TamilSchoolmychoice

அஸ்ட்ரோ அவானி ஜூலை 30-ஆம் தேதி காலை 9.00 மணிக்கு மாமன்னர் அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்வதை நேரலையாகக் கொண்டு வரவுள்ளது