Home நாடு “அறிவியல் துறையில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திறமை வெளிப்பட வேண்டும்!”- அமைச்சர் பொன். வேதமூர்த்தி

“அறிவியல் துறையில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திறமை வெளிப்பட வேண்டும்!”- அமைச்சர் பொன். வேதமூர்த்தி

1017
0
SHARE
Ad
படம்: நன்றி அமைச்சர் பொன். வேதமூர்த்தி முகநூல்

கோலாலம்பூர்: பள்ளி, மாநிலம் மற்றும் தேசிய அளவில் தமிழ் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கழகம் (அஸ்டி) நடத்திய இளம் மாணவர்களுக்கான தேசிய அறிவியல் கண்காட்சியில் பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி கலந்து கொண்டார்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் அறிவியல் புரிதலையும் திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பினை ஆண்டுதோறும் இந்த இயக்கம் ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  இன்றுவரையிலும், 269 தமிழ் பள்ளிகள் மாநில அளவில் பங்கேற்றுள்ள நிலையில், 70 பள்ளிகள் இவ்வாண்டுக்கான தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாண்டிற்கான இந்த போட்டியில் பினாங்கைச் சேர்ந்த ஜாலான் சுங்கை தமிழ் பள்ளி வாகை சூடியுள்ளது. இம்மாதிரியான போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் தங்களை அனைத்துலக அளவிலான போட்டிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டு வெற்றிகளைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இம்மாதிரியான போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்றும், தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொணர அரசும் கூடுமான வரையில் உதவு வேண்டும் என்றும் அமைச்சர் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார். இவ்வாண்டுக்கான போட்டி நிகழ்ச்சிக்கு மித்ரா மூலம் அஸ்டிக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது.