Home 13வது பொதுத் தேர்தல் தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிடத் திட்டம்

தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிடத் திட்டம்

570
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், ஏப்ரல் 4 – நேற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, தேசிய முன்னணி அரசு தங்களது தேர்தல் அறிக்கையை வரும் சனிக்கிழமை வெளியிட முடிவெடுத்துள்ளது.

அதோடு அதற்கு அடுத்த சில நாட்களில், தேசிய முன்னணி அரசின் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி பிரதமர் நஜிப் கூறுகையில், “இந்த தேர்தல் அறிக்கை மலேசிய மக்களுக்கு கொடுக்கப்படும் ஓர் சத்திய வாக்கு, தேசிய முன்னணி அரசு மீண்டும் பதவியில் அமர்ந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே கடவுளின் விருப்பமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தேர்தல் ஆணையம் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தேதியையும், தேர்தல் நடைபெறவிருக்கும் தேதியையும் அறிவிப்பதற்காக தாம் காத்துக்கொண்டிருப்பதாகவும், அதன் பின் தான் தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போவதாக நஜிப் தெரிவித்துள்ளார்.