Home One Line P1 “ஹாங்காங் எல்லையை நோக்கி சீன இராணுவம்” – டிரம்ப் தகவல்

“ஹாங்காங் எல்லையை நோக்கி சீன இராணுவம்” – டிரம்ப் தகவல்

843
0
SHARE
Ad

வாஷிங்டன் – ஹாங்காங்குடனான தனது எல்லையை நோக்கி சீன அரசாங்கம் தனது இராணுவத் துருப்புகளை நகர்த்தி வருவதாக அமெரிக்க உளவுத் துறை தனக்குத் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஹாங்காங்கில் நிகழ்ந்து வரும் ஆர்ப்பாட்டங்களில் ஜனநாயகப் போராட்டவாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையில் மோதல்கள் வலுத்துவரும் நிலையில் இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டுமெனவும் டிரம்ப் கேட்டுக் கொண்டார்.

ஹாங்காங் விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டாலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்னும் அந்த விமான நிலையத்தில் குழுமியுள்ளனர்.