Home One Line P1 “ஜாகிருக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன, நாடு கடத்துங்கள்!”- ரகிம் நூர்

“ஜாகிருக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன, நாடு கடத்துங்கள்!”- ரகிம் நூர்

994
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை அந்தஸ்த்தை இரத்து செய்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு முன்னாள் காவல் துறைத் தலைவர் அப்துல் ரகிம் நூர் வலியுறுத்தியுள்ளார்.

ஜாகிருக்கு எதிராக விசாரணைகள் நடந்து கொண்டிருக்கையில், அரசாங்கம் தனது முடிவை எடுக்க போதுமான காரணங்கள் இருப்பதாக அவர் தனிப்பட்ட முறையில் நம்புவதாகக் கூறினார்.

கிளந்தானில் அவர் என்ன சொன்னார் என்பதற்கும் அவர் இந்தியாவில் என்ன செய்தார் என்பதற்கும் உறுதியான ஆதாரங்கள் உள்ளன. ஜாகிரின் நிரந்தர குடியுரிமை நிலையை இரத்து செய்து அவரை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். அங்குள்ள சட்ட நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக ஜாகிர் நாயக் குற்றங்கள் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அவரது நிரந்தர குடியுரிமை அந்தஸ்த்து பறிக்கப்படும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்திருந்தார்.

“இருப்பினும், எனது தனிப்பட்ட பார்வை என்னவென்றால், அவர் இந்நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்களின், குறிப்பாக இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் மதம் மற்றும் பிற விவகாரங்களைத் தொட்டுள்ளார். விசாரணையின் முடிவுக்காக நாம் காத்திருக்கக்கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜாகிர் குறித்த தனது நிலைப்பாட்டை ஏற்காதவர்கள், இந்தியாவில் உள்ள பல இஸ்லாமிய போதகர்கள் ஏன் சட்டத்தில் சிக்கலில் சிக்கவில்லை என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அவர் தனது சொந்த நாட்டில் செய்த ஒன்று சட்டத்திற்கு எதிரானது. ஆகவே, அவர் இந்திய அதிகாரிகளால் தேடப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டார். வெளிநாட்டினர் இங்கு வந்து குழப்பத்தையும் சிக்கலையும் தூண்டுவதற்கு மதத்தைப் பயன்படுத்தத் தேவையில்லைஎன்று அவர் கூறினார்.

நமக்கு இம்மாதிரியான நபர்கள் தேவையா? என்னைப் பொறுத்தவரை, அவர் தேவையற்றவர்” என்று ராகிம் கூறினார்.

மலேசியாவில் ஜாகிர் இடம்பெறும் நிகழ்வுகள் பெரும் ஆதரவை ஈர்த்துள்ள நிலையில், மும்பையில் பிறந்த போதகர் தனது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும், அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ரஹீம் கூறினார்.

பணமோசடி தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக இந்தியாவில் பிறந்த ஜாகிர் நாயக் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்த்தாலும், சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.