Home One Line P1 மலேசியா முழுவதிலும் ஜாகிர் நாயக் பேசத் தடை!

மலேசியா முழுவதிலும் ஜாகிர் நாயக் பேசத் தடை!

955
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா முழுவதும் பொது சொற்பொழிவுகள் வழங்க காவல் துறையினர் தடை விதித்துள்ளதாக ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் தகவல் தொடர்புத் தலைவர் அஸ்மாவதி அகமட் உறுதிபடுத்தினார் என்று மலாய் மெயில் குறிப்பிட்டிருந்ததாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.

இதுபோன்ற உத்தரவு அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பின் நலனுக்காகவும் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காகவும் செய்யப்பட்டதுஎன்று அஸ்மாவதி மேற்கோளிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜாகிரை இனி பேசத் தடை விதிக்க்கும் உத்தரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் கிளந்தானில் ஜாகிர் பேசிய கருத்துகளின் சர்ச்சையைத் தொடர்ந்து, பல்வேறு மாநில இஸ்லாமிய அதிகாரிகள், அவரை தங்கள் மாநிலங்களில் பேச அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கிளந்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, மலேசியாவில் உள்ள இந்துக்கள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை விட இந்தியப் பிரதமருக்கு அதிக விசுவாசமுள்ளவர்கள் என்று அவர் கூறியதைத் தொடர்ந்து பெருமளவில் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், சீன சமூகம் மலேசியாவில் பழைய விருந்தினர்கள் என்றும், தாம் வெளியேற வேண்டுமெனில் முதலில் வந்த சீனர்கள்தான் வெளியேற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்திருந்தார்.