வாஷிங்டன் – தொடர்ந்து நீடித்து வரும் அமெரிக்கா – சீனா இடையிலான வணிகப் போர் உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் எதிர்வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சீனாவின் 250 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கு வரிவிதிப்பு 25 விழுக்காட்டிலிருந்து, 30 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் டிரம்ப் இந்தத் தகவலைக் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவிருக்கும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள செல்லவிருக்கும் டிரம்ப் அதற்கு முன்பாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சீனா விதித்திருக்கும் வரிவிதிப்புக்கு பதிலடியாக அமெரிக்கா இந்த புதிய வரிவிதிப்பை அறிவித்திருக்கிறது.
தி முதல் சீனாவின் எஞ்சிய 300 பில்லியன் மதிப்புடைய பொருட்களுக்கான வரிகள் 10 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் 75 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கான வரிவிதிப்பை சீனா அறிவித்த சில மணிநேரங்கள் கழித்து டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியானது.
அமெரிக்காவின் 5,078 பொருட்களுக்கு 5 முதல் 10 விழுக்காடு வரையிலான கூடுதல் வரிவிதிப்புகளை சீனா விதிக்கவிருக்கிறது.
இரண்டு கட்டங்களாக இந்த வரி விதிப்பு அமுல்படுத்தப்படவிருக்கிறது. முதல் கட்ட வரிவிதிப்பு செப்டம்பர் 1 தேதியும், இரண்டாவது கட்ட வரிவிதிப்பு டிசம்பர் 15-ஆம் தேதியும் அமுலுக்கு வரும்.