Home One Line P1 பி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்

பி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்

1226
0
SHARE
Ad

பேசல் (சுவிட்சர்லாந்து) – பேட்மிண்டன் எனப்படும் பூப்பந்து போட்டி விளையாட்டுகளில் பல இந்தியர்கள் பல போட்டிகளில் பங்கெடுத்து வந்தாலும், இதுவரையில் அனைத்துலக ரீதியிலான எந்தப் போட்டியிலும் அவர்கள் யாரும் தங்கம் வென்றதில்லை.

முதன் முறையாக பெண்களுக்கான 2019 உலகப் பூப்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் ஜப்பானிய வீராங்கனை நோசோமி ஒக்குஹாரா என்ற விளையாட்டாளரை இரண்டே செட் ஆட்டங்களில் 21-7; 21-7 என்ற புள்ளிகள் எண்ணிக்கையில் தோற்கடித்தார்.

இதன் மூலம் முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வெல்லும் சிந்து, உலகப் போட்டிகளில் பூப்பந்து விளையாட்டில் தங்கம் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.