Home One Line P2 பிக் பாஸ் 3 : கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்! மீண்டும் இரகசிய அறைக்குள் நுழைய மறுத்தார்!

பிக் பாஸ் 3 : கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்! மீண்டும் இரகசிய அறைக்குள் நுழைய மறுத்தார்!

1921
0
SHARE
Ad

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் இரசிகர்களால் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒவ்வொருவராக பங்கேற்பாளர்களை கொன்பெஷன்ஸ் ரூம் எனப்படும் தனியறைக்குள் அழைத்து கமல்ஹாசன் கலந்துரையாடி சில ஆலோசனைகளையும் தனிப்பட்ட முறையில் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்த நால்வரான,  சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி, ஆகியோரில் வெளியேற்றப்படுபவர் கஸ்தூரி என கமல் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும் கஸ்தூரி வெளியே வந்து மேடையேறியவுடன் பிக்பாஸ் இல்லத்தில் அவரது சம்பவங்களைக் கொண்ட குறும்படத்தைப் போட்டுக் காட்டிய கமல் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்ற முன்னுரையுடன், கஸ்தூரி மீண்டும் இரகசிய அறையின் வழியாக பிக்பாஸ் இல்லத்தினுள் உள்ளே சென்று பங்கெடுக்க அனுமதியுண்டு என அறிவித்தார்.

எனினும், கஸ்தூரி வலுக்கட்டாயமாக மறுத்து விட்டார். அவரது மகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுக்க விரும்பவில்லை என்றும் கமலிடம் கூறிவிட்டார்.

அவரது கருத்துக்கு மதிப்பளிப்பதாகக் கூறிய கமல், பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட கஸ்தூரியின் மகளுக்கு அவர் அதிகம் தேவைப்படுவதாகக் கூறி அவரை வாழ்த்தியனுப்பி வைத்தார்.