கோலாலம்பூர்: முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் பழமையைக் கொண்ட ஓர் இளம், கவர்ச்சியான அரசியல்வாதி என்றும், அவரின் அமலாக்க அதிகாரிகளை கேள்வி கேட்க முடியாதவர் என்றும் விமர்சித்துள்ளார்.
“தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் தலைவர்கள், கடந்த காலங்களில் வாழ்ந்தார்கள். சைட் சாதிக், துரதிர்ஷ்டவசமாக, கடந்த காலத்தின் இரசிகர். மலேசியாவுக்கு ஒரு பொறுமையான தலைவர் தேவை, அவர் வெவ்வேறு குழுக்களுடன் ஈடுபடுவது நேரத்தை வீணடிப்பதாக நினைக்காதவராக இருக்க வேண்டும்” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
அரேபிய வனப்பெழுத்து கல்வியை எதிர்த்து வெளியிடப்பட்ட செகாட் என்ற அமைப்பினை, சைட் சாதிக் அறிவிலிகள் என்று குறிப்பிட்டதற்கு சைட் இவ்வாறு கருத்துரைத்தார்.
முன்னதாக சைட் சாதிக் பல்வேறு சிக்கல்களில் சிக்கியிருப்பதாக சைட் தமது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியிருந்தார்.
“சைட் சாதிக் கல்வி துறையில் இல்லை, ஆனால் அவர் ஜாவிக்காக போராடுவார். அவர் போக்குவரத்து துறையில் இல்லை, ஆனால் கோஜெக்காக குரல் கொடுப்பார். அவர் மத விவகாரங்களில் ஈடுபடவில்லை, ஆனால் ஜாகிர் நாயக்கை ஆதரிப்பார். இதுவும் ஒரு அறிவிலித்தனமான செயல்தான்” என்று அவர் கூறினார்.