Home One Line P1 எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை நிகழ்ச்சியின் நேரத்தை மாற்றும்படி ஜாகிம் கேட்டுக் கொண்டது!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை நிகழ்ச்சியின் நேரத்தை மாற்றும்படி ஜாகிம் கேட்டுக் கொண்டது!

770
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இவ்வார இறுதியில் (ஆகஸ்டு 31) இஸ்லாமிய புத்தாண்டு பொது விடுமுறையான அந்நாளில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சியை வேறொரு தேதிக்கு அல்லது நேரத்திற்கு மாற்றுமாறு வெளிநாட்டு கலைஞர்களைக் கையாளும் அரசு நிறுவனமான புஸ்பாலை அறிவுறுத்தியதாக ஜாகிம் இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.

நாட்டில் இஸ்லாமிய விசயங்களுக்குப் பொறுப்பான ஜாகிம், இஸ்லாமியத் தேதியில் ஒரு முக்கியமான நாள் அது என்பதால், அந்நேரத்தில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சிகளை வேறு தேதிக்கு அல்லது நேரத்திற்கு மாற்றப்பட்டால் அது பொருத்தமானது இருக்கும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளதுஎன்று புஸ்பால் தெரிவித்திருந்தது.

இந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் கலந்து கொள்ள இருக்கும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ராகவ் புரொடக்க்ஷன்ஸ், ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டுகளை முன்பதாகவே விற்றதுள்ளது குறிப்பிடத்தக்கது, ஆனால், அத்தேதியை மாற்ற அமைப்பாளர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் அனுமதி வழங்கப்படாது என்று புஸ்பால் குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

மேல்முறையீட்டைத் தொடர்ந்து, நிகழ்ச்சி நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக, 3 மணிக்குத் தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.