Home One Line P1 கிமானிஸ் நாடாளுமன்றம் : அனிபா அமான் மேல்முறையீடு

கிமானிஸ் நாடாளுமன்றம் : அனிபா அமான் மேல்முறையீடு

715
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்றத்தில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிபா அமான் வெற்றி பெற்றது செல்லாது என தேர்தல் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை எதிர்த்து அனிபா அமான் மேல் முறையீடு செய்துள்ளார்.

கிமானிஸ் தொகுதியில் அனிபா அமான் பெற்ற வெற்றி செல்லாது என கோத்தா கினபாலு தேர்தல் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை முறையாக நடத்தவில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் கோத்தா கினபாலு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாங்கள் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் அனிபா அமானின் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தால் அதில் பங்கெடுப்போம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.