Home One Line P1 “ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான இலவச உணவு திட்டம் 1.6 பில்லியன் செலவை உட்படுத்துகிறது!”- வீ கா சியோங்

“ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான இலவச உணவு திட்டம் 1.6 பில்லியன் செலவை உட்படுத்துகிறது!”- வீ கா சியோங்

634
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் இலவச காலை உணவு திட்டத்தின் பின்னணியில் உள்ள செலவினங்களை டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார். இத்திட்டத்தின் வாயிலாக ஒரு வருடத்திற்கு அரசாங்கம் 1.6 பில்லியன் ரிங்கிட் நிதியை செலவிட நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.

வளமாக வாழும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அரசாங்கம் இலவச காலை உணவை வழங்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று செவ்வாயன்று தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்ட அவர், அந்நிதியை விவசாயிகளுக்கு உதவ அல்லது மலிவு வீடுகளை கட்டுவதற்கு பணத்தை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மாணவர்கள் சிலர் தங்கள் சொந்த உணவுப் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகவும், சிலர் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு காலை உணவைச் சாப்பிடுவதாகவும் அவர் கூறினார்.

அப்படியானால், இந்த திட்டம் ஒவ்வொரு குழந்தைக்கும் எவ்வாறு பொருத்தமானதாகவும் நடைமுறைக்குரியதாகவும் இருக்கும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஒவ்வொரு ஆரம்பப்பள்ளி  மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கப்படும் என்று கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.