Home One Line P1 ஜாகிர் நாயக்: அமைச்சர் குலசேகரன் 2 மணி நேரம் வாக்குமூலம், நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!

ஜாகிர் நாயக்: அமைச்சர் குலசேகரன் 2 மணி நேரம் வாக்குமூலம், நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!

717
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தம்மீது அவதூறு கருத்துகளை திணிப்பதாகக் கூறி சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் அமைச்சர் எம்.குலசேகரன் உட்பட, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, பாகான் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் ஆகியோருக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

இதனிடையே, அண்மையில் பேராசிரியர் இராமசாமி மற்றும் சதீஸ் ஆகியோர் தங்களின் வாக்குமூலத்தைப் பதிவுச் செய்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சர் எம்.குலசேகரன் தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார். இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த இந்த வாக்குப்பதிவினை புக்கிட் அமானை சேர்ந்த குற்றப் புலனாய்வுத் துறையின் டி 5 பிரிவைச் சேர்ந்த டிஎஸ்பி ஆனந்தன் ராஜு  மேற்கொண்டார்.

#TamilSchoolmychoice

ஜாகிர் நாயக் விவகாரத்தில் தாம் அவதூறு கருத்துகளை வெளியிடவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.