Home One Line P1 சவுதி தாக்குதல் : எண்ணெய் விலைகள் எகிறுகின்றன – பங்குச் சந்தைகள் இறங்குகின்றன

சவுதி தாக்குதல் : எண்ணெய் விலைகள் எகிறுகின்றன – பங்குச் சந்தைகள் இறங்குகின்றன

754
0
SHARE
Ad

ரியாத் – சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் உலக சந்தையில் வெகுவேகமாக உயர்ந்து வருகின்றன.

தாக்குதல்களைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் அதிகாரத்துவ எண்ணெய் நிறுவனமான அராம்கோ தனது இரண்டு எண்ணெய் உற்பத்தி கிணறுகளில் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, அதன் மொத்த உற்பத்தி பாதியாகக் குறைந்திருக்கிறது.

சுமார் 5.7 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியை சவுதி தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

தாக்குதல் நடத்தப்பட்ட சுத்திகரிப்பு ஆலை உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாகும்.

இதனைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் ஒருபுறம் எகிறிக் கொண்டிருக்க, அமெரிக்காவின் பங்குச் சந்தைகளோ இறங்குமுகமாக இருக்கின்றன.

எண்ணெய் விலைகள் கடந்த சில நாட்களில் 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஏற்கனவே நிலவி வரும் அமெரிக்கா-சீனா இடையிலான வணிகப் போர், இறங்குமுகமான பொருளாதார நிலைமை, இவற்றுக்கிடையில் ஏற்றம் கண்டிருக்கும் எண்ணெய் விலைகள், ஈரான்-சவுதி அரேபியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் – இப்படியாக எல்லாம் சேர்ந்து கொள்ள பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டிருக்கின்றன.

மலேசியாவிலும் எண்ணெய் விலைகள் ஏற்றம் கண்டால், பயனீட்டாளர்களுக்கு உதவும் பொருட்டு அரசாங்கம் உதவித் தொகை வழங்கக் கூடும் என பிரதமர் துன் மகாதீரும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் சவுதி தாக்குதலில் ஈரானிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற ஆரூடங்கள் உறுதியாகி வருகின்றன. ஆனால் ஈரான் இதனை மறுத்துள்ளது.

தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக, அமெரிக்கா துணைக்கோள புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது.