ஜெருசேலம்: ஐந்து மாதங்களில் இரண்டாவது இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது. நாட்டின் மிக நீண்ட காலம் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியில் இருக்க முடியுமா என்பதை மக்கள் இன்று முடிவு செய்ய உள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி (0400 ஜிஎம்டி) செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நாடு முழுவதும் 10,788 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி இரவு 10 மணிக்கு (1900 ஜிஎம்டி) முடிவடைய உள்ளது.
தேர்தல்களில் வாக்களிக்க சுமார் 6.4 மில்லியன் இஸ்ரேலிய குடிமக்கள் உள்ளனர் என்று தேர்தல் மேற்பார்வையிடும் மத்திய தேர்தல் குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இரண்டு கட்சிகள் போட்டியிலிருந்து விலகிய பின்னர், 120 ஓரவை நாடாளுமன்ற இடங்களுக்காக 29 கட்சிகள் போட்டியிடுகின்றன.