Home One Line P1 முனைவர் இராஜகோபாலின் நூல் வெளியீடு – “என் ஆசிரியர் பணி நினைவலைகள்”

முனைவர் இராஜகோபாலின் நூல் வெளியீடு – “என் ஆசிரியர் பணி நினைவலைகள்”

895
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நமது நாட்டில் கல்விப் பணியில் ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க பணிகளையும், பங்கையும் ஆற்றியிருந்தாலும் அதுகுறித்த அனுபவங்களை அவர்கள் நூலாக எழுதி வெளியிடுவது மிகவும் அபூர்வமாக நிகழ்கிறது.

அந்த வகையில் சாதாரணக் குடும்பப் பின்னணியில் பிறந்து பின்னர் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு, இடைவிடாது கடும் முயற்சியோடு பல்கலைக் கழகப் பட்டப் படிப்புகளையும் முடித்து, முனைவர் பட்டத்தையும் பெற்ற இராஜகோபால் பொன்னுசாமி சுவாரசியமான தனது ஆசிரியர் பணி அனுபவங்களைத் தொகுத்து “என் ஆசிரியர் பணி நினைவலைகள்” என்ற நூலாக வெளிக் கொணர்ந்துள்ளார்.

இந்த நூலின் வெளியீட்டு விழா முனைவர் இராஜகோபால் விரிவுரையாளராகப் பணியாற்றிய தலைநகர் லெம்பா பந்தாய் ஆசிரியர் கல்விக் கழகத்தில், பன்னாட்டு மொழி வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

தொழிலதிபர் டத்தோஸ்ரீ டாக்டர் சூசை மைக்கல் இந்த நூல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்குகிறார். டாக்டர் ரஹிம் கமாலுடின் இந்த நூல் குறித்த நூலாய்வை வழங்கி உரை நிகழ்த்துகிறார்.

டாக்டர் நாகலிங்கம் கருப்பையா நூலுக்கு அணிந்துரை வழங்கி உரையாற்றுகிறார்.

மனோவியல் பயிற்றுநர் டாக்டர் காதர் இப்ராகிமின் எழுச்சியுரையும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் முக்கிய அங்கமாக இடம் பெறுகிறது.

பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இனிய, சிறப்பான தமிழ் உரைகளைக் கேட்டு மகிழவும், பங்கு கொண்டு பயனடையவும் நூலாசிரியர் முனைவர் இராஜகோபால் கேட்டுக் கொள்கிறார்.