கோலாலம்பூர்: மலேசியாவில் ஆயிரக்கணக்கான சீன நாட்டினர் தங்களது விடுமுறைகளை இரத்து செய்து மற்ற ஆசிய நாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இணைய வலைத்தளமான, மலேசிய பிணைப்பிலுள்ள சீன சங்கம் (மிகா) கூறுகையில், 30 பயணிகளைக் கொண்ட, 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா குழுக்கள் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளதாக மலேசியா இன்சைட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“சில சுற்றுலா குழுக்கள் இரத்து செய்ய போதுமான நேரம் இருந்தபோதிலும், இதன் தாக்கம் பேரிழப்பைத் தரும்.” என்று மிகா தலைவர் ஏன்ஜி எங் கூறினார்.
இரத்து செய்யப்பட்டதால் 70 முதல் 80 பயண முகவர் வணிகத்தில் 20 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளதாக ஏன்ஜி எங் மேலும் கூறினார்.
மலேசியாவின் பிரபலமான இடங்களில் பெரும்பாலானவை வெளிப்புற இடங்கள் என்று அவர் குறிப்பிட்டார், அதே நேரத்தில் கோலாலம்பூர் கோபுரம் போன்ற தளங்கள், புகை மூட்டம் காரணமாக கோலாலம்பூர் நகரத்தை உயரத்திலிருந்து காணும் வாய்ப்பை பறித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த வாரம் மழைக்காலத்தின் போது நாட்டில் காற்றின் தரம் மேம்படும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது.