Home One Line P1 தஞ்சோங் பியாய்: ஜோகூர் மந்திரி பெசார் நம்பிக்கைக் கூட்டணியின் இடைத்தேர்தல் இயக்குனராக நியமனம்!

தஞ்சோங் பியாய்: ஜோகூர் மந்திரி பெசார் நம்பிக்கைக் கூட்டணியின் இடைத்தேர்தல் இயக்குனராக நியமனம்!

659
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

ஜோகூர் பாரு: ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ டாக்டர் சாருடின் ஜமால் நம்பிக்கைக் கூட்டணியின் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜோகூர் பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

டாக்டர் சாருடினின் தலைமையில் நவம்பர் 16 நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக மொகிதின் குறிப்பிட்டார்.

இன்று, தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் இயக்குநராக டாக்டர் சாருடினை நியமித்துள்ளோம். அவரது தலைமையுடன், நாங்கள் வெற்றியைப் பெறுவோம்,” என்று மொகிதின் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜோகூர் ஜசெக தலைவர் லீவ் சின் டோங், ஜோகூர் பிகேஆர் தலைவர் சைட் இப்ராகிம் சைட் நோ, ஜோகூர் பெர்சாத்து தலைவர் மஸ்லான் பூஜாங் மற்றும் ஜோகூர் பார்ட்டி அமானா நெகாரா தலைவர் அமினோல்ஹுடா ஹாசன் ஆகியோர் இணைந்து இந்த இடைத்தேர்தலில் சாருடினுக்கு உதவுவார்கள் என்று மொகிதின் கூறினார்.