Home One Line P1 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, 2 ஜசெக உறுப்பினர்கள் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, 2 ஜசெக உறுப்பினர்கள் கைது!

2456
0
SHARE
Ad

மலாக்கா: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.

இவ்விரண்டு ஜசெக தலைவர்கள் கைது செய்யப்பட்டதை புக்கிட் அமான் சிறப்பு கிளை உதவி இயக்குநர் அயோப் கான் மைடின் பிச்சை உறுதிப்படுத்தியுள்ளார்.

இருவரும் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

இருப்பினும், மலேசியாகினியால் இந்த விஷயத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அது பதிவிட்டுள்ளது.

அவர்கள் இருவரும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 அல்லது சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை வட்டாரங்கள் தெரிவித்ததாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது. இச்சட்டம் சம்பந்தப்பட்டவர்களை 28 நாட்கள் காவலில் வைக்க அனுமதிக்கிறது.

மலாக்கா முதலமைச்சர் அட்லி ஜாஹாரியும், தமது ஆட்சிக்குழு உறுப்பினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கைதுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.