Home One Line P1 விடுதலைப் புலிகள்: “காவல் துறை அதன் பணியைச் செய்கிறது, அரசுக்கு இதில் சம்பந்தமில்லை!”-மகாதீர்

விடுதலைப் புலிகள்: “காவல் துறை அதன் பணியைச் செய்கிறது, அரசுக்கு இதில் சம்பந்தமில்லை!”-மகாதீர்

941
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கைது செய்யப்பட்ட இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேரை சட்ட விதிகளின்படி காவல் துறை கைது செய்துள்ளதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

அவரது நிருவாகத்தின் தலையீடு இல்லாமல் காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும், எந்தவொரு கட்சியையும் பலவீனப்படுத்தும் வகையில் கைது செய்யப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

இது ஏன் நடந்தது என்பதை அரசாங்கம் அறிய விரும்புகிறது. எந்தவொரு தரப்பினரையும் பலவீனப்படுத்த அதிகாரத்தைப் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நான் மக்களை கைது செய்யவில்லை. அல்லது மொகித்ன் யாசின் அல்ல. ஆனால், காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் சட்டத்தின் கீழ் செயல்படுகின்றனர். என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அடுத்த மாதம் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக, இந்த கைதுகள் நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவைக் குறைக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, அரசியல் தாக்கங்கள் இருந்தால், தடுத்து வைக்கப்பட்டவர்களின் பின்னணி என்ன என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, இது குறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம், விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் உள்ளவர்களின் கைதினை தாம் வரவேற்பதாகக் கூறினார். ஆயினும், சோஸ்மா சட்டம் அவர்கள் மீது திணிக்கப்படுவது சரியானதல்ல என்று தெரிவித்தார்.