Home One Line P1 வெள்ளை அறிக்கை ஜாகிர் நாயக்கிற்கும் வெளியிடப்பட வேண்டும்!- பி.இராமசாமி

வெள்ளை அறிக்கை ஜாகிர் நாயக்கிற்கும் வெளியிடப்பட வேண்டும்!- பி.இராமசாமி

891
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கைதானவர்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை உருவாக்க அரசாங்கம் விரும்பினால் தனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கூறினார்.

ஆயினும், பெராய் சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறுகையில், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் உடன் இணைந்து சண்டையிட்டவர்கள் மற்றும் 1எம்டிபி மீதான வெள்ளை அறிக்கைகளும் வெளியிடப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நான் அதனை வரவேற்கிறேன், ஆனால் 1எம்டிபியிலிருந்து பாஸ் கட்சியில் யார் பெற்றது என்ற வெள்ளை ஆவணங்களையும் பெற விரும்புகிறேன்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ்ஸிற்காக போராடுபவர்களை கைது செய்வது குறித்தும் எனக்கும் வெள்ளை அறிக்கையைப் பெற விரும்புகிறேன். ஜாகிர் நாயக் மீதான வெள்ளை அறிக்கையும் வேண்டும். அண்மையில் கோலாலம்பூரில் நடந்த குண்டுவெடிப்புக்கும் ஜாகிர் நாயக்கிற்கும் சம்பந்தம் உள்ளதா? ஜாகிர் நாயக் அனைத்துலக பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளாரா, ”என்று அவர் இன்று திங்கட்கிழமை சட்டசபையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

இதற்கிடையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்தது உட்பட 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தை (சோஸ்மா) பயன்படுத்துவதை காவல் துறை நிறுத்த வேண்டும் என்று இராமசாமி வலியுறுத்தினார்.

அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் நான் அந்த ஆதாரங்களை மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மட்டுமே கேட்கிறோம். இறுதியாக நீதியென்பது நீதிபதியால் தீர்மானிக்கப்படுகிறது, காவல் துறையால் அல்ல, ”என்று அவர் கூறினார்.