Home One Line P1 விடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை!”- அன்வார்

விடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை!”- அன்வார்

994
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போது செயலில் இல்லாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் ஏழு பேரைக் கைது செய்தது குறித்து பாதுகாப்பு மற்றும் உள்துறை விவகார நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) ஆராய வேண்டும் என்ற ஆலோசனையுடன் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் உடன்படவில்லை.

எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இது தேவையில்லை. நாம் காவல் துறைக்கு போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும்.”

காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை. காவல் துறையின் விசாரணை நடவடிக்கைகளை கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லைஎன்று அவர் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் வெள்ளை அறிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று பாஸ் பரிந்துரைத்தது தொடர்பில் கருத்துரைத்த அன்வார், இந்த விவகாரம் அமைச்சரவையில் கலந்தாலோசிக்க வேண்டி உள்ளது என்றார்.

பிஎஸ்சி விசாரணைக்கான ஆலோசனையை கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் முன் வைத்தார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சோஸ்மாவைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க சிறப்புக் குழு கூட்டத்திற்கு லிம் லிப் எங் அழைப்பு விடுத்திருந்தார்.

தேர்வுக் குழுத் தலைவர் மன்சோர் ஒத்மானும் இந்த வாரம் அக்கூட்டத்தை நடத்த ஒப்புக்கொண்டார்.