Home One Line P2 சந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி!

சந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி!

1064
0
SHARE
Ad

புது டில்லி: விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது என்பது குறித்த சில புதிய தகவல்களை விரைவில் பெறலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டருடனான தொடர்பு, அது நிலவில் தரையிறங்கும் முயற்சியின் போது துண்டிக்கப்பட்டது.

தற்போது, விக்ரம் தரையிறங்க முயற்சித்த பகுதியின் புகைப்படங்களை நாசாவின் சந்திர ஆர்பிட்டர் எடுத்துள்ளது. முன்பு படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்களைப் போலல்லாமல், விக்ரமின் தரையிறங்கும் தளத்தின் புதிய படங்கள் நல்ல வெளிச்சமான ஒளி சூழ்நிலையில் எடுக்கப்பட்டுள்ளன. இது சந்திரயான் -2 லேண்டரைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையை எழுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலையில் சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்க முயன்றபோது விக்ரம் லேண்டருடனான தொடர்ப்பு துண்டிக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) பல முயற்சிகள் இருந்தபோதிலும், விக்ரமுடன் தகவல் தொடர்புகளை மீண்டும் நிறுவ முடியவில்லை.

#TamilSchoolmychoice

பின்பு, நாசா தனது சந்திர ஆர்பிட்டரை பயன்படுத்தி சந்திரயான் -2 லேண்டரின் தரையிறங்கும் தளத்தை படம் பிடித்தது.  ஆயினும், சாதகமற்ற ஒளி நிலைமைகள் மற்றும் சந்திரனின் தென் துருவப் பகுதியில் நிழல்கள் இருப்பதால் விக்ரமைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே, இவ்வாரம் திங்களன்று மீண்டும் விக்ரமின் தரையிறங்கும் தளத்தின் மீது பறந்து சிறந்த புகைப்படங்களை நாசாவின் ஆர்பிட்டர் எடுத்துள்ளது.

அடுத்த சில நாட்களில் விக்ரம் லேண்டர் குறித்த தகவல்கள் நமக்கு கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.